10வது கண்ணகி கலை இலக்கிய விழா 2020.

சென்ற வருடம் (2019) இலங்கையில் நடந்த கோரக் குண்டுவெடிப்பு காரணமாக மட்டக்களப்பு கல்லடியில்  மிக எளிமையாக ஆனால் கனகச்சிதமாக எமது ஒன்பதாவது விழாவை நிறைவுசெய்தோம்.

இவ்வருடம் 2020 எமது பத்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா. 


இதனை மிகவும் சிறப்பாகவும் புதிய முறையிலும் நடாத்த வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தோம்.  ஆனால் முடியவில்லை.

காரணம். யவரும் அறிந்தது.

கொரோணா எனும் கொடிய வைரசின் தாக்கம் உலகோடு எம்மையும் இணைத்துக்கொண்டதனால் இந்த வருடம் அமைதியாய் கழியட்டும்.

 

அடுத்த வருடம் பத்தாவது விழாக் காண்போம்.!!!

ஒன்பதாவது கண்ணகி கலை இலக்கிய விழா

வருடாவருடம் கூலினால் முன்நெடுக்கப்படும் கண்ணகி கலை இலக்கிய விழா  இவ்வருடம் ஒன்பதாவது விழாவாக மட்-கல்லடி துளசி மண்டபத்தில் (சிவானந்த வித்தியாலயத்திற்கு முன்னால்) ஒருநாள் விழாவாக நடைபெறவுள்ளது. இவ்விழா பேஸ்புக் இல் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது என்பதை விழாவிற்கு வருகைதராத மற்றும் புலம்பெயர் அன்பர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கீழ்வரும் பேஸ்புக் பக்கத்தில் சென்று நேரடியாக பார்த்த மகிழலாம்.






கண்ணகி கலை இலக்கிய விழா 2018.

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவில் தமிழகப் பேச்சாளர் தி.சு.நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த களுதாவளை விழாக் குழுவினருக்கு நினைவுப் பட்டயம் வழங்கப்பெற்றது.

தேற்றாத்தீவில் கோலாகலமாக ஆரம்பமாகியது எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா - 2018

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா செப்டம்பர்- 6 2018 அன்று களுதாவளை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில்  கோலாகலமாக ஆரம்பமானது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டின் ஒரு அங்கமாக  இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது. சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் விளையாடப்பெற்றது இந்நிகழ்வை மீண்டும்  ஒரு நூற்றாண்டுக்குப் பின் அதே இடத்தில் கண்ணகி கலை இலக்கியக் கூடல் நிகழ்த்தி ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றி அமைத்தது. இந் நிகழ்வை பட்டிப்பளை பிரதேச  ஆலய நிருவாகிகளும் அப்பிரதேசத்தில் கொம்புமுறி விளையாட்டில் தேற்சி பெற்ற அனுபவசாலிகளும் மூத்த கொம்புமுறி வீரர்களும் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.