கண்ணகி கலை இலக்கிய விழா – 2014


  • கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல்.
  • பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை பயின்றுவரும் கண்ணகி சம்பந்தமான தொன்மங்களை மீட்டுப்பார்த்தல்;.
  • கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல்.
  • தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையேயான பொதுமைகளை ஆராய்தல்.
ஆகிய நோக்கங்களைக் கொண்டு 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட 'கண்ணகி கலை இலக்கிய விழா', அவ்விழாவில் வெளியிடப்பெற்ற கண்ணகி இலக்கிய விழாப் பட்டயத்திற்கு அமைவாக வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனை முன்னெடுக்கும் பொருட்டு 'கண்ணகி கலை இலக்கியக் கூடல்' என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. முதலாவது விழா 'கண்ணகி இலக்கிய விழா – 2011' ஆக ஐ{ன் 18,19 ஆகிய தினங்களில் மட்டக்களப்பில், மட்ஃஅரசடி மகாஜனக் கல்லூரிக் கலை அரங்கில் நடைபெற்றது. இரண்டாவது விழா 2012 ஐ{லை 28,29 ஆகிய தினங்களில் மட்டக்களப்பில், மட்ஃபுதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய மண்டபத்தில் 'கண்ணகி கலை இலக்கிய விழா–2012' ஆக நடைபெற்றது. மூன்றாவது விழா அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் ஆலையடிவேம்பு பிரதேசசபை கலாசார மண்டபத்தில் 2013 யூன் 15,16 ஆகிய தினங்களில் நடாத்தப்பட்டது.

நான்காவது 'கண்ணகி கலை இலக்கிய விழாவை' இம்முறை அம்பாறை மாவட்டம், தம்பிலுவில்லில் நடத்துவதென்று 04.05.2014 அன்று மட்ஃஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற கூடலில் கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, 18.05.2014 காலை 10.00 மணிக்கு திருக்கோவில், விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் 2014 ஆகஸ்ட் 2ம், 3ம் திகதிகளில் 'கண்ணகி கலை இலக்கிய விழா 2014 ஐ தம்பிலுவில்லில்  நடாத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக மேலும் பலரை உள்ளடக்கிய அடுத்த கூட்டம் எதிர்வரும் 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நடாத்தப்பட்டு, விழாக்குழுவைத் தெரிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நடைபெறவுள்ள கூட்டத்திற்குத் தாங்களும் தவறாது சமூகமளித்துத் தங்கள் பங்களிப்பினை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.