தேற்றாத்தீவில் கோலாகலமாக ஆரம்பமாகியது எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா - 2018

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா செப்டம்பர்- 6 2018 அன்று களுதாவளை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில்  கோலாகலமாக ஆரம்பமானது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டின் ஒரு அங்கமாக  இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது. சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் விளையாடப்பெற்றது இந்நிகழ்வை மீண்டும்  ஒரு நூற்றாண்டுக்குப் பின் அதே இடத்தில் கண்ணகி கலை இலக்கியக் கூடல் நிகழ்த்தி ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றி அமைத்தது. இந் நிகழ்வை பட்டிப்பளை பிரதேச  ஆலய நிருவாகிகளும் அப்பிரதேசத்தில் கொம்புமுறி விளையாட்டில் தேற்சி பெற்ற அனுபவசாலிகளும் மூத்த கொம்புமுறி வீரர்களும் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.