கண்­ணகி வழி­பாடு பண்­பாட்டின் அடை­யாளம் (03.08.2014 வீரகேசரியில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் அவர்களின் பேட்டி )

பண்­பாட்டுப் பவ­னி­யுடன் ஆரம்­ப­மான மட்­டக்­க­ளப்பு கண்­ணகி கலை இலக்­கிய கூடலின் மூன்று நாள் கண்­ணகி கலை இலக்­கிய விழா இன்­றுடன் நிறை­வு­பெ­று­கின்­றது. முடி­யுடை மூவேந்தர் ஆண்ட நாடு­க­ளுடன் தொடர்­பு­பட்­டவள் கண்­ணகி. சோழ­நாட்­டிலே பிறந்து, பாண்டி நாட்­டிலே வளர்ந்து சேர நாட்­டிலே தெய்­வீ­க­மானாள். அவ­ரு­டைய தெய்­வீ­க த்தை அறிந்து சேர­நாட்டு மன்னன் செங்­குட்­டுவன் அவ­ளுக்கு விழா எடுத்தான். இவ­னு­டைய காலத்தே இலங்­கையை ஆண்­டவன் கஜ­பாகு ஆவான். இரு­வரும் நட்பு பூண்­டி­ருந்­ததால் கஜ­பாகு தனது நாட்­டிலும் கண்­ணகி விழாவை ஆரம்­பித்தான். ஈழத்தின் பல பகு­தி­க­ளிலும் மறைந்­து­போன இவ்­விழா கிழக்கில் மட்டும் நிலை­ பெற்­று­நிற்­கி­றது. இங்­குள்ள அநே­ க­மான கிரா­மங்­களில் உள்ள கண் ­ணகி அம்மன் ஆல­யங்கள் இத ற்கு சான்று பகர்­கின்­றன.
கடந்த 2011ஆம் ஆண்டில் மட்­டக்­க­ளப்பில் கண்­ணகி கலை இல க்­கிய 'கூடல்' என்னும் பெயரில் ஓர் அமைப்பு அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டது. அதன் தலை­ வ­ராக கவி­ஞர் த.கோபா­ல­கி­ருஷ் ணன் தெரிவு செய்­யப்­பட்டார். இன்­று டன் நான்கு விழாக்­களை வெற்­றி­ க­ர­மாக நடத்­தி­யுள்­ளனர் கூடல் அமைப்­பினர். இந்த அமைப்பு பற்றி வீர­கே­சரி வார வெளி­யீட்டின் சார்­பாக ஒரு நேர்­காணல் இடம்­பெற்­றது. அதன்­போதே அவர் கண்­ணகி வழி­பாடு பண்­பா ட்டு அடை­யாளம் என்று குறிப்­பிட்டார்.
அவ­ரு­ட­னான நேர்­கா­ணலின் விபரம் வரு­மாறு:
கேள்வி: இவ்­வா­றான ஓர் அமைப்பின் அவ­சியம் ஏன் உண­ரப்­பட்­டது?
பதில்: இன்­றைய தகவல் தொழில்­நுட்­பத்தின் அதீத வள ர்ச்சி. உல­க­ம­ய­மாகும் நுகர்வு. நாக­ரி­கத்தின் நவீன வளர்ச்சி. ஆட ம்­பர மோகம். இவற்­றினால் நமது பாரம்­ப­ரிய பண்­பாட்டு கலை வடி­வங்கள் மறைந்­து­கொண்டு செல்­கின்­றன. நல்ல நெறிகள் நெஞ்சை விட்டு நீங்கி தீய நெறிகள் குடி­பு­குந்­து­விட்­டன. இதனால் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­து­விட்­டன. நவீன கலை வடி­வங்­களால் தீய நெறியில் நிற்கும் மக்­களை மீட்­க­மு­டி­யாது. பாரம்­ப­ரிய கலை வடி­வங்­களால் மட்­டுமே அது முடியும். கண்­ணகி வழி­பாடு கிழக்கின் பண்­பாட்டு அடை­யா­ள­மாகும். எனவே இதனை முன்­னெ­டுத்தால் மக்கள் மத்­தியில் இல­கு­வாக செல்லும். அதன்­மூலம் மக்­களை இல­கு­வாக நல்­வ­ழியில் இட்டுச் செல்­லலாம். இந்த விட­யத்தில் பேரா­சி­ரியர் மெள­ன­குரு உட்­பட பலர் ஆர்வம் கொண்­டி­ருந்­தனர். அத்­த­கை­யோரின் கூட்டு முயற்­சியே கூடல்.
கேள்வி : உங்கள் எதிர்­பார்ப்பு கண்­ணகி கலை இலக்­கிய விழா மூலம் நிறை­வே­று­கின்­றதா?
பதில் : ஆம். மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டு ள்ள ஆர்­வமும் பண்­பாட்டு தளத்தில் அவர்­களை ஒன்­றி­ணைக்க முடிந்­துள்­ள­வையும் அதன் வெற்­றி­யாகும். நமது மக்­களை அறி­வு­பூர்­வ­மாக ஆற்­றுப்­ப­டுத்தி ஆக்­க­பூர்­வ­மான வழியில் இட்டுச் செல்­வது எமது நோக்கு. இதற்கு முதலில் தேவைப்­ப­டு­வது ஒற்­றுமை. சமூ­கத்தை ஒற்­று­மைப்­ப­டுத்த வேண்டும். இது­வரை அதனைச் செய்­துள்ளோம். அந்த மன­நி­றை­வுடன் இனிமேல் அடுத்த பணி­க­ளுக்கு செல்வோம்.
கேள்வி: இப்­பா­ரிய பணிக்­கான நிதி மற் றும் ஆளணி வச­தி­க­ளுக்கு உறு­தி­யான அடித்­தளம் இடப்­பட்­டுள்­ளதா?
பதில்: உறு­தி­யான அடித்­தளம் என்­ப­த ற்கு இல்லை. விழா­வுக்­காக வரு­டாந்தம் பேரா­ளர்­களைத் திரட்­டு­கின்றோம். இவர்­க ளின் மூலமும் பொது­மக்­க­ளிடம் இருந்தும் நிதி திரட்­டப்­ப­டு­கின்­றது. பிர­தே­ச­வா­ரி­யாக விழா முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால் அங்­குள்ள மாண­வர்கள் இளை­ஞர்கள், பெரி­ய­வர்கள் ஒத்­து­ழைப்பு நல்­கின்­றனர். எதிர்­கா­லத்தில் புலம்­பெ­யர்ந்து வாழும் உற­வு­க­ளிடம் ஆத­ரவு பெற­வுள்ளோம். இதன்­மூலம் நிதி கிடைக்கும் என்ற நம்­பிக்கை உண்டு. நிதி மிகுந்­தவர் பொற்­குவை தாரீர். நிதி குறைந்­ தவர் காசுகள் தாரீர். ஆண்­மை­யாளர் உழை ப்­பினை நல்கீர். அதுவும் அற்­றவர் வாய்ச் சொல் அருளீர். இவையே எமது வேண்­டு கோள். இது­வரை அன்பும் அர­வ­ணைப்பும் ஆத­ரவும் கிடைத்­துள்ள பூரிப்பு எமக்கு.
கேள்வி: வரு­டாந்தம் ஒரு விழாவை நடத்­து­வது மட்டும் உங்கள் நோக்­கமா? வேறு திட்­டங்கள் உண்டா?
பதில்: மக்­களை ஒன்­று­ப­டுத்­து­வது முதல் நோக்கம். அதனை இது­வரை செய்­துள் ளோம். அடுத்து சகல பாரம்­ப­ரிய கலை­க­ளிலும் கவனம் செலுத்­தப்­படும். பின்னர் அவற்றை வளர்ப்­பதில் ஈடு­பாடு காட்­டப்­ப டும். கல்வி வச­தி­யற்ற ஏழை மாண­வர்­க­ளு க்கு கல்வி அறிவை ஊட்­டவும், வித­வை­க­ளுக்கு சுய­தொழில் உத­வி­களை வழங்கி வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இவை கிரா­மப்­பு­றங்­களில் மட்­டுமே மேற்­கொள்­ளப்­படும்.
கேள்வி: விழாவில் இடம்­பெறும் விட­யங்கள் குறிப்­பாக ஆய்­வுக்­கட்­டு­ரைகள் ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா?
பதில் : ஏன் இல்லை. நிகழ்­வுகள் யாவும் ஒளிப்­ப­திவு செய்­யப்­ப­டு­கின்­றன. இவை அடுத்த விழா­வின்­போது காண்­பிக்­கப்­பட்டு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அத்­துடன் 'பரல்' என்னும் பெயரில் ஒவ்­வொரு வரு­ட மும் விழா­வின்­போது சிறப்பு மலரும் வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. இம்­ம­லரில் ஆய்­ வுக்­கட்­டு­ரைகள் யாவும் இடம்­பெ­று­கின் ­றன. இந்த ஆய்வுக் கட்­டு­ரை­களைத் தொகு த்து நூலாக வெளி­யி­டு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளன.
கேள்வி: கண்­ணகி வழி­பாடு கிழக்கில் மட்­டுமே நிலை­பெற்­றுள்­ளது. கிழக்கின் பூர்­வீக குடி­யினர் சேர நாட்­டினர் என்­பது இத ற்கு கார­ணமா?
பதில்: இது ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய விடயம். இருப்­பினும் நீங்கள் குறிப்­பிட்­ட­து­போல இங்கு வாழும் மக்கள் சேர­நாட்டு வழி­வந்­த­வர்கள் என்­பதும் ஒரு கார­ண­மாக இருக்­கலாம். மேலும் கிழக்கு கண்­ணகி வழி­பாட்­டுக்கு உகந்த இட­மாக காணப்­பட்­டது. கண்­ணகி உழைக்கும் மக்­களின் தெய்­வ­மாக மதிக்­கப்­பட்டாள். கிழ க்கில் உள்ள மக்கள் விவ­சா­யத்தை மேற்­கொண்­டனர். எனவே இங்கும் உழைக்கும் மக்கள் வாழ்ந்த கார­ணத்­தினால் உழைக்கும் மக்­களின் தெய்­வ­மான கண்­ணகி வழி­பாடு நிலை பெற்­றி­ருக்­கலாம். ஆகம முறைக்கு உட்­ப­டாத வழி­பாட்­டுக்கு கிழக்கில் எதிர்ப்பு இருக்­க­வில்லை. இதுவும் ஒரு கார­ண­மாக இருக்­கலாம்.
கேள்வி: கொம்பு விளை­யாட்டு கிழக் கில் ஒரு முக்­கிய பாரம்­ப­ரிய கலை வடிவம். கண்­ண­கி­யு­டனும் தொடர்­பு­பட்­டது. இந்­திர விழா போன்று இங்­குள்ள பல கிரா­மங்­களில் எமது சிறு வயதில் நடத்­தப்­பட்­டது கடந்த சுமார் அரை நூற்­றாண்­டாக அது கைவி­டப்­பட்­டு­விட்­டது. கடந்த சில ஆண்­டு­க­ளாக ஓரிரு கிரா­மங்­களில் ஓரிரு தட­வைகள் மிகச்­சி­றிய அளவில் நடத்­தப்­பட்­டது. இவ்­வ­ருட தொடக்க விழாவின் போது கொம்பு விளை­யாட்டு நடத்தி காட்­டப்­பட்­டது. இதனை கிழக்கு மக்கள் யாவரும் கண்டு களிக்க வாய்ப்பு இல்லை. அதனை பயின்று பின் சந்­ததிக்கு கொண்டு செல்­லவும் முடி­யாது. எனவே இந்த விளை­யாட்டை முன்னர் போல விம­ரி­சை­யாக கிராமம் தோறும் நட த்த நீங்கள் கரி­சனை காட்ட முடி­யாதா? இத­னூ­டாக கிராம மட்­டத்தில் அதிக மக்­களை ஒன்று திரட்­டவும் பண்­பாட்டு விழு­மி­யங்­களை நீங்கள் எதிர்­பார்ப்­பது போல் முன்­னெ­டுக்­கவும் முடி­யு­மல்­லவா?
பதில்: இது ஒரு சிறந்த ஆலோ­சனை. அடுத்து வரும் வரு­டங்­களில் நாம் நிச்­ச­ய­மாக இதில் கவனம் செலுத்­துவோம்.
கேள்வி: பிர­தேச மட்­டத்தில் ஏன் விழா நடத்­தப்­ப­டு­கி­றது? 2ஆவது விழா புது­கு­டி­யி­ருப்­பிலும் 3ஆவது விழா அக்­க­ரைப்­பற் ­றிலும் நடத்­தப்­பட்­டன. இவ்­விரு கிரா­மத்­து க்கும் இடையில் கண்­ணகி கோயில் கொண்­டுள்ள சில முக்­கிய பிர­தே­சங்கள் இருக்­கின்­றன. அங்கு விழா நடத்­தப்­ப­ட­வில்­லையே?
பதில்: பர­வ­லாக நடத்­தப்­ப­டு­வது சிறப்பு. கண்­ணகி விழா முழு தமிழ் சமூ­கத்­தையும் ஒட்­டி­யது. எனவே பிர­தேச ரீதி­யாக எல்லா மக்­க­ளையும் சென்­ற­டையும். மேலும் சில முக்­கிய கிரா­மங்கள் இருப்­பது உண்மை தான். ஆனால், புது­கு­டி­யி­ருப்பு ஆலை­யடி வேம்பு, திருக்­கோவில், தம்­பி­னுவில் மக்கள் முன்­வந்­தது போல ஏனைய கிரா­மத்­தவர் முன்வரவில்லையே.
இவ்வாறு இச்செவ்வியிலே செங்கதிரோன் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். கண்ணகி கலை இலக்கிய விழாவில் ஒரு முக்கிய அம்சத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டும். கண்ணகி வரலாற்றில் கண்ணகி, கோவலன், மாதவி, சாத்தனார், கவுந்தியடி கள், இளங்கோவடிகள் ஆகிய ஆறு முக் கிய பாத்திரங்கள் உள்ளன. கண்ணகி கலை இலக்கிய விழா மூன்று நாட்களுக்கு ஆறு அமர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 அமர்வுகளும் மேற்படி 6 பேரின் பெயரிடப்பட்ட அரங்குகளிலேயே நடத்தப் படுகின்றன. இவர்களின் சிறப்பு திறமைக்கு ஏற்பவே அவர்களின் பெயரிலான அரங்கில் நிகழ்வுகள் இடம்பெறுவது மிக விசேட அம்சமாகும். மாதவி நடனம் எனவே மாதவி அரங்கில் நிறைவு நாள் கலை அமர்வும் இளங்கோவடிகள் காப்பிய கர்த்தா எனவே இளங்கோவடிகள் அரங்கில் ஆய்வு அமர்வும் நடத்தப்படுகின்றன.
(நேர்­காணல்: மண்டூர் நிருபர்)
நன்றி : வீரகேசரி