க.இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
சிலப்பதிகாரப் பாவிகங்களுள் ஒன்று உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்பது. பொதுமக்கள் மத்தியிலும் கண்ணகி பத்தினித் தெய்வமாகவே போற்றப்படுகிறாள். இல்லறத்தை மாசுமறுவின்றி நடத்துபவளே பத்தினி எனப்படுபவள். வேறு வகையிற் சொல்வதானால் கற்புடன் நடந்து கொள்பவள் பத்தினி. கற்பு என்ற சொல்லுக்கு உரிய நேர்ப்பொருள் கொள்கை என்பது. அவ்வகையில் இல்லறத்துக்குரிய கொள்கைகளினின்றும் வழுவாது நடந்து கொள்பவள் பத்தினி எனலாம்.
திருமணம்
இல்லறம் என்பது திருமணத்திலேயே ஆரம்பிக்கிறது. சிலப்பதிகார ஆசிரியர் தம் காவியத்தை கோவலன் -கண்ணகி திருமணத்தோடேயே ஆரம்பிக்கிறார். அக்காலத்தைய இயல்பின்படி கண்ணகி இளம்வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்படுகிறாள். திருமணத்தின் போது அவளுக்கு வயது பன்னிரண்டுளூகோவலனுக்கு வயது பதினாறு. கடல் வாணிபத்தில் ஈடுபடுகின்ற பெருஞ் செல்வன் ஒருவனின் மகள் கண்ணகி. கோவலனும் அப்படியே.
கண்ணகி அழகாலும் ஒழுக்கத்தாலும் நல்ல பெயர் எடுத்தவள்.
'போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் (அடுந்ததியின்) திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்'
என்று தன் சூழலிலே புகழப்படுபவள்.
கோவலனின் ஒழுக்கம் பற்றி சிலப்பதிகார ஆசிரியர் எதுவும் பாராட்டியதாகத் தெரியவில்லை. ஆனால் மிக அழகானவன் என்று ஊரிலுள்ள பெண்கள் மத்தியில் பேரெடுத்தவன்;ளூ;;;; அவர்களால் விரும்பப்படுபவன் என்கிறார் இளங்கோ.
'மண்தேய்த்த புகழினான்ளூ மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி
'கண்டேத்தும் செவ்வேள்'என்று இசைபோக்கி காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான்'
இவர்களது திருமணம் காதல் திருமணமா பேச்சுத் திருமணமா என்று இளங்கோவெளிப்படையாகக் கூறவில்லைளூ ஆனால் அவர்களது காதல் பற்றி எதுவும் கூறாததாலும் அவர்களது திருமண நடைமுறை பற்றிக் கூறுவனவற்றை வைத்துக் கொண்டும் அது பேச்சுத் திருமணமே என்பதை ஊகிக்கலாம். இருவரது பெற்றோரும் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார்கள். திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்ததுளூ முதிய அந்தணர் ஒருவரால் ஓமம் வளர்த்து வைதிக முறைப்படி அத்திருமணம் நடந்தது.
தாம்பத்திய வாழ்க்கை
ஏழடுக்கு மாளிகையொன்றின் நான்காவது மாடியில் புதுமணத் தம்பதியான அவர்கள் தங்கவைக்கப்பட்டார்கள்ளூ அங்குதான் அவர்களது முதலிரவுளூ பள்ளியறையிலே அவர்கள் இருவரும் சூரியனும் சந்திரனும்போல விளங்கினார்கள்;. மல்லிகைப் பூவால் கட்டப்பட்ட மாலையைக் கோவலன் அணிந்திருந்தான்ளூ கண்ணகி கழுநீர்ப் பூமாலை அணிந்திருந்தாள்.
எது மல்லிகைமாலை எது கழுநீர்மாலை என்று தெரியாதவகையில் மாலைகள் இரண்டும் கசங்கி உருவழியும்படியாக அவர்கள் இருவரும் கலந்தார்கள். ஒரு நிலையில், தன் கையைச் சற்றே நெகிழ்த்தியவனாக, கோவலன், தீராக்காதலோடு, கண்ணகியின் முகம் நோக்கி நலம் புனைந்துரைக்கின்றான்ளூ அது மிக நீண்டதாக - கண்ணகியிடம் அவன் அடைந்த திருப்தியின் பிரதிபலிப்பு என்னும் படியாக- மிகுந்த கவிதைத் தன்மை உடையதாக அமைகிறது. பதிலுக்குக் கண்ணகி பேசியதாக இளங்கோ காட்டவில்லைளூ பேசாமடந்தையாகவே இருந்தாள் போலும்!தினமும்,
'உலவாக் கட்டுரை பலபாராட்டி
தயங்கிணர்க்கோதை தன்னொடும் தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து'
இருந்தான். எனவே இருவரது தாம்பத்திய வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை என்பதை உணரலாம். 'தருக்கி'என்ற சொல்லாட்சி அவதானிக்கத் தக்கது. தருக்குதல் என்றால் சண்டை செய்தல் -போர் செய்தல். அது கலவிப்போர். இருவரும் கலவியில் முழுமையாக ஈடுபட்டனர் என்பது கருத்து. இவ்வாறாக இருந்துவரும் நாட்களிலே இவர்கள் முறையான இல்லறத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில்- அதாவது அறம் செய்தல், விருந்துபசாரம் செய்தல் முதலான இல்லறக் கடமைகளை இவர்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் செய்யவேண்டும் என்றநோக்கிலேகோவனலதுதாய்,அவர்கள்தனியொருவீட்டிலே தனிக்குடித்தனம் நடத்த ஏற்பாடு செய்தாள். அங்கே முறையான இல்லறத்திலே சில ஆண்டுகள் கழிந்தன.
பிரிவு
அவ்வாறு அவர்கள் வாழ்ந்துவரும் காலத்திலேதான் மாதவியின் அரங்கேற்றம் வருகின்றது. முறையாக நாட்டியத்தையும் பிற கலைகளையும் பயின்ற ஆடல்குல மகளும் அழகியுமான மாதவியின் அரங்கேற்ற முடிவில் அவள் ஏலம் விடப்பட, அவளை ஆயிரத்து எட்டுக் களஞ்சு பொன் கொடுத்து தன்னுடையவளாக்கினான் கோவலன். அவளுடைய வீட்டிற் சென்று தங்கினான்.
'மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விரும்பினன் ஆயினன்'
அன்றைய காலச் சூழ்நிலையில் ஆடவர் பரத்தையரை நாடிச் செல்லுதல் குற்றமான விடயமல்லளூ பரத்தையரிடம் செல்வதும் அவர்களை விட்டுவிடுவதும் சாதாரண விடயம்- அது விட்டுவிட வேண்டிய உறவு. ஆனால் கோவலன் விடுதல் அறிய விரும்பினன் ஆயினான்.
பிரிவு நிலையில் கண்ணகி
தன் அழகு தனக்குரியதல்ல கணவனுக்கு உரியது என்ற நிலைப்பில் வாழ்பவளாகவே கண்ணகியை இளங்கோ சித்திரிக்கிறார். கணவன் தன்னுடன் இருந்த காலத்தில் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்ட கண்ணகி, கணவன் தன்னைப் பிரிந்த சோகத்தால் தன்னை அலங்கரிப்பதையே மறந்து சோகமே வடிவானவளானாள்.
'அஞ்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரிய
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப
பவள வாள்நுதல் திலகம் இழப்ப
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப
கையறு'
நெஞ்சத்தினளானாள் கண்ணகி. சம்பிரதாயப்படி அணிய வேண்டிய மங்கலஅணி (தாலி?) தவிர வேறு எதனையும் அவள் அணிந்தாளில்லை. கோவலன் பிரிந்தபின்பு அவளுடைய உதட்டில் புன்னகை உதித்ததில்லை. அதனைக் கூறவந்த இளங்கோ முத்துப் போன்ற ஒளிபொருந்திய நகையை –சிரிப்பை கண்ணகி இழந்தாள் என்று கூறவில்லைளூ 'தவள வாள் நகை கோவலன் இழப்ப'–என்று கோவலனது இழப்பாகவே அதனைக் கூறுகின்றமை அவதானிக்கத்தக்கது.
தெய்வம் தொழாக் கண்ணகி
'தெய்வம் தொழாள் கொழுநாற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'
என்பது வள்ளுவர் கூற்று. கணவனே கண்கண்ட தெய்வம் என்பது உலக வழக்கு. இவ்வாறான கருத்து நிலைக்கு அமைவானவளாகவே கண்ணகி சித்திரிக்கப் பெறுகிறாள்.
கண்ணகியைப் பிரிந்த கோவலன் மீண்டும் வந்து சேர்வதற்கு கண்ணகியின் தோழி தேவந்தி ஒரு உபாயம் சொல்கிறாள்.
'சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கி
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்'
என்ற அந்த உபாயத்தைக் கேட்ட கண்ணகி அதிகம் பேசவில்லை. 'பீடு அன்று'–அது எனக்குப் பெருமையானது அல்ல என்று ஒருவார்த்தையில் மறுத்துரைக்கும் கொள்கைப் பிடிப்புள்ளவளாகவே கண்ணகி சித்திரிக்கப்படுகிறாள்.
கோவலன் மீண்டு வந்த நிலையில் கண்ணகி
மாதவியோடு விடுதல் அறியா விருப்பினனாகக் கிடந்த கோவலன் சந்தர்ப்பவசத்தால் -புரிந்துணர்வின்மையால் அவளைப் பிரிய வேண்டி நேர்கிறது. பிரித்தவன் தன் இல்லம் நாடி வந்தான். வந்தவன் நேரே படுக்கையறை சென்றான்.கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டு வருத்தமுற்றான்.
'சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடி
குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு'
என்று கழிவிரக்கப்பட்டான். அந்நிலையில் கண்ணகி தன் வருத்தத்தை வெளிப்படுத்தாதவளாக தன் கணவன் மீண்டு வந்ததால் உண்டான மகிழ்;ச்சியோடு 'சிலம்பு உள்ளது –எடுத்துக் கொள்ளுங்கள்'என்றாள்.
வந்த கோவலன் தன் குலத்தரு வான்பொருட் குன்றம் தொலைந்தமை பற்றியே அதிகம் கவலை கொண்டான். ஆகவே அதை மீளப்பெறுவதற்கு வியாபாரத்துக்கான முதலாக தன்னிடம் இருந்த சிலம்பை எடுத்துக் கொள்ளும்படி கூறினாள் கண்ணகி. அவள்கணவனின் குறிப்பறிந்து நடந்தாள்.
அவனும்
'சேயிழை கேள்,
இச் சிலம்பு முதலாக சென்ற கலனொடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்தசீர்
மாட மதுரையகத்துச் சென்றுளூ என்னோடு இங்கு
ஏடலர் கோதாய் எழுக'
என்றான்ளூ அவளும் எழுந்தாள். இருவரும் விடிவதற்கு முன்பாகவே ஊரைவிட்டுப் புறப்படலாயினர். இங்கும் கோவலன் பேச்சுக்கு மறுப்புரை பேசாதவளாகவே கண்ணகி நடந்து கொள்வதை இளங்கோ காட்டுகிறார்.
பழிமொழியும் புகழ்மொழியும் தாங்காக் கண்ணகி
ஊரைவிட்டுப் புறப்பட்டு இருவரும் மதுரைநோக்கி நடந்தனர். வழியிலே கவுந்தி என்னும் சமணப் பெண் துறவி அவர்களுக்கு வழித்துணையாக வாய்த்தாள். மூவரும் காட்டுவழியே செல்கையில் பரத்தையொருத்தியும் பயனில்லாதன பேசும் காமுகன் ஒருவனும் எதிர்ப்பட்டனர். அவர்கள் கவுந்தியடிகளிடம் கண்ணகி, கோவலன் இருவரையும் சுட்டி 'காமனும் தேவியும் போலும் இவர் ஆர்?'என வினவினர். அதற்கு கவுந்தியடிகள் இயல்பான அன்புணர்வோடு 'என் மக்கள் காணீர்'என்றார். அதுகேட்ட அவர்கள் அவர்களைச் சீண்டும் நோக்கோடு 'ஒருவயிற்றிலே பிறந்தவர்கள் கணவன் மனைவியாக வாழ்வதும் உண்டோ?'என்று இடக்கு முடக்காகப் பேசினார்கள். அத்தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்து காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்கினாள் என்று அவளது மெல்லியல்பைக் காட்டுகிறார் இளங்கோ.
பழிமொழி கேட்டுப் பதைப்பது போலவே அதிக புகழ் மொழிக்கும் அவள் நாணுகிறாள். மதுரை செல்லும் வழியிலே ஐயை கோட்டத்திலே மூவரும் இளைப்பாறினர். அங்கே நடந்த சடங்கிலே சாலினி என்பவள் தெய்வமேறிய நிலையிலே, கண்ணகியைச் சுட்டி,
'இவளோ கொங்கச் செல்விளூ குடமலையாட்டிளூ
தென்தமிழ்ப்பாவை செய்தவக் கொழுந்துளூ
ஒருமாமணியாய் உலகுக்கு ஓங்கிய
திருமாமணி'
என உரைத்தாள். அதைக்கேட்ட கண்ணகி
'பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி'
என்று சொல்லிக்கொண்டு கணவன் முதுகுக்கு பின் ஒதுங்கி வெட்கம் மேலிடப் புன்னகைத்தாள்.
இவை கண்ணகியின் மெல்லியல்பை உணர்த்துவதற்காக இளங்கோ ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பங்கள். பிற்காலத்திலே அவளிடத்துத் தோன்றுகின்ற துணிவுக்கும் ஆவேசத்துக்கும் முற்றிலும் முரணான சுபாவம் இது.
மதுரை நோக்கிச் சென்ற கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகள் மூலம் மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயப்பெண்ணாண மாதரியிடம் அடைக்கலம் கொடுக்கப்படுகிறார்கள். ஆயர் சேரியிலே தனியொரு வீட்டிலே அவர்கள் குடியிருத்தப்படுகிறார்கள். சமையற் பண்டங்கள் வழங்கப்பட்டன. கண்ணகி தன் வாழ்நாளில் முதன்முதலிற் சமையலில் ஈடுபடுகிறாள். ஏவலாளர் இன்றிய வாழ்க்கையில் கணவனுக்காகத் தானே சமைக்கிறாள். அவள் சமைக்கும் பாங்கிலும் அவளது மென்மையையே இளங்கோ நுட்பமாகப் புலப்படுத்துகிறார். காய்கறிகளை நறுக்கும்போது அவளது மெல்விரல் சிவந்ததுளூ முகம் வியர்த்ததுளூ கண் சிவந்தது. தன் அறிவுக்கேற்ற அளவில் அவள் சமைத்தாள் என்கிறார் இளங்கோ.
சமைத்து முடிந்ததும் பனந்தடுக்கிலே கோவலனை அமர்வித்தாள். அவனுடைய பாதங்களைக் கழுவினாள். நிலத்துக்கும் தண்ணீர் தெளித்தாள். இவை அக்கால வழக்கம் போலும! குமரிவாழைக் குருத்தை விரித்து அமுது படைத்தாள். அவனும் உண்டான். உண்டபின் தாம்பூலம் கொடுத்தாள். அந்நிலையில் கோவலன் தான் விட்ட தவறுகளையும் அவற்றின் விளைவுகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கழிவிரக்கப்பட்டான். நான் விட்ட தவறு எதையும் பொருட்படுத்தாது, மதுரை செல்வதற்காக எழுக என்று சொன்னதும் ஒரு பேச்சும் பேசாது எழுந்து வந்தாயே!இது உன்னால் எவ்வாறு முடிந்தது? எனக் கலங்கினான்;. அப்போதுதான் கண்ணகி கோவலனுடன் பேசுவதை முதன்முதலாகக் காட்டுகிறர் இளங்கோ. இதுவரை அடக்கியிருந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்ப்பதுபோல அவள் பேசுகிறாள்.
இல்லறவாழ்விலே இயற்ற வேண்டிய கடமைகளான,
'அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க்கு எதிர்;தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்'
என்று இவை எல்லாவற்றையும் நீர் என்னைப் பிரிந்ததால் இழந்தேன். உம்முடைய தாய் தந்தையர் என்னைக் காண வந்த வேளைகளில் உம்மேல் அவர்களுக்கிருந்த கடுங்கோபத்தை மறைத்துக் கொண்டு அன்பு நிறைந்த வார்த்தைகளால் என்னைப் பாராட்டினர். என் உள்ளத்திலே மறைத்து வைத்த வருத்தத்தை அவர்களுக்குக் காட்டி விடுவது போன்ற என் பொய்யான சிரிப்பைக் கண்டு அவர்கள் மனம் வருந்தினார்கள். இவ்வாறெல்லாம் ஆகும்படி நடக்கக்கூடாத முறையிலே நடந்து கொண்டீர். ஆனால் நானோ ஒருகாலத்தும் மாறாத நிலையான அன்பும் கொள்கையும் உடையவளானபடியால் நீர் அழைத்தவுடன் எழுந்து வந்தேன்.
'போற்றா ஒழுக்கம் புரிந்தீர்ளூ யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றெழுந்தனன் யான்'
என்கிறாள்; கண்ணகி. அதன்பின் தன்னைத் தாழ்த்தியும் அவளைப் புகழ்ந்தும் பேசிய கோவலன் ஒற்றைச் சிலம்புடன் மதுரை அகநகர் சென்று கொலையுண்டான்.
கணவனை இழந்த நிலையில் கண்ணகி
ஆயர் சேரியிலே நிகழ்ந்த தீநிமித்தங்கள் கண்டு ஆயர் குலப் பெண்கள் குரவைக்கூத்தாடினர். கூத்தின் முடிவிலே, அங்கு நின்ற கண்ணகிக்கு கோவலன் கொலையுண்ட சேதி தெரிய வருகின்றது. கணவனுக்கு உண்டான கள்வன்என்ற பழிச் சொல்லையும் அநீதியான அவனது சாவையும் தாங்கமாட்டாதவளானாள் கண்ணகி. கணவன் இருக்கும் வரையில் அதிகம் பேசா மடந்தையாகத்தான் கண்ணகி இருந்தாள். ஆனால் அவன் இறந்ததும் அவள் பேசவேண்டிய நிலைக்கு ஆளானாள்ளூ பேசினாள். கணவன் இறந்தபின் கைம்மை நோன்பு நோற்றுக்கொண்டு பேசாதிருக்கின்ற சாதாரண பெண்கள் போல நானும் வாழ்ந்து மடிவேனோ என்று ஆவேசம் கொள்கிறாள் அவள்.
'இன்புறு தங்கணவர் இடர் எரியும் மூழ்கத்
துன்புறுவன நோற்றுத் துயருறு மகளிரைப்போல்
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன் நான் அவலம் கொண்டு அழிவலோ'
நடக்கும் அநீதிகளைப் பார்த்துக்கொண்டு பேசாதிருக்கும் சமூகத்தின் நீதி உணர்வு பற்றிக் கேள்வி எழுப்புகிறாள்.
'பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்

நீதியை நிலைநாட்டுவதற்காக- தன் கணவனதும் குடும்பத்தினதும் நற்பெயரை நிலை நாட்டுவதற்காக-உயர்மட்டம் வரையிலே செல்லத் துணிகிறாள் கண்ணகி. மிக நுட்பமான முறையிலே நீதிபேசி தன் பக்கத்து நியாயத்தை நிரூபிக்கிறாள்.
'நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே என
தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழிளூ
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியேளூ
தருக எனத் தந்து தான் முன்வைப்ப,
கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே'
அவளுடைய தோற்றமும், நீதியை நிலை நாட்டும் பேச்சும் மன்னவன் உயிரை எடுத்துவிடுகின்றன.
'மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் -வையைக்கோன்
கண்டளவே தோற்றான்ளூ காரிகைதன் சொல்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.'
இறுதியில் கண்ணகி தெய்வமாகினாள் என்று காவியம் முடிகிறது. சிலப்பதிகாரக் கண்ணகி இல்லறத்தில் கணவனோடு வாழும் நிலையில் வீட்டுக்கு அடங்கிய பெண்ணாகவும் கணவனை இழந்த நிலையில் பொறுப்புகள் யாவற்றையும் தானே ஏற்றுக்கொண்டு செயலாற்றி வென்று முடிக்கும் திறம் உள்ளவளாக- சமூக உணர்வுள்ளவளாகவுமேசித்திரிக்கப் பெறுகிறாள்.