கண்ணகி கலை இலக்கியக் கூடல்
தலைவர் | செயலாளர் | பொருளாளர் | |
த.கோபாலகிருஸ்ணன் |
அன்பழகன்_குரூஸ் |
ச.ஜெயராஜா | |
துணைத் தலைவர்கள் | |||
மா.சதாசிவம் |
க.தங்கேஸ்வரி | ||
துணைச் செயலாளர் | |||
சுந்தரமதி வேதநாயகம் | |||
காப்பாளர்கள் | |||
பேராசிரியர். சி.மெளனகுரு |
![]() செ.எதிர்மன்னசிங்கம் |
நோக்கம்
கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல்
பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரைப் பயின்று வரும் கண்ணகி சம்பந்தமான தொன்மங்களை மீட்டுப்பார்த்தல்
கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல்
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையிலான பொதுமைகளை ஆராய்தல்
வருடாந்த உத்தேசச் செயற்பாடுகள்
- ஆய்வரங்குகள்
- உரையரங்குகள்
- கவியரங்குகள்
- விவாத அரங்குகள்
- அரங்களிக்கைகள்
- வெளியீடுகள்
- ஆவணவாக்கங்கள்
- காட்சிப்படுத்தல்கள்
- ஊர்வலங்கள்
- இலத்திரனியல் பதிவுகள்
- சிலை நிறுவுதல்
கண்ணகி கலை இலக்கிய விழாவுக்கான கால்கோள்
2009 ஆம் ஆண்டில் இறுதிப் பகுதியில் ஓர் நாள் மாலை மட்டக்களப்பில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் வீட்டு முற்றத்தில் நானும் (செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்) நண்பர் ஆறுமுகமும் அளவளாவிக் கொண்டிருந்த போது 2010 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பிலே கண்ணகி இலக்கிய விழா ஒன்றினை நடத்தவேண்டும் என்ற எண்ணம் கருக்கொண்டது. ஆனால் அது சாத்தியமாகவில்லை.
பின்னர் 12.03.2011 அன்று அன்பழகன் குரூஸ் அவர்களையும் எம்மோடு இணைத்துக்கொண்டு அதுவும் ஒரு மாலை வேளையில்தான் மெளனகுரு அவர்களின் வீட்டில் சந்தித்தோம். அன்றைய சந்திப்பில் கண்ணகி இலக்கிய விழாவின் நோக்கங்களை வரைந்தோம். 14.03.2011 அன்று அவரது வீட்டிலேயே நடந்த இரண்டாவது சந்திப்பில் அவை ஒரு பிரசுர வடிவில் அன்பழகன் குரூஸ் அவர்களால் தயாரித்துச் சமர்ப்பிக்கப்பட்டது. மூன்றாவது சந்திப்பு 18.03.2011 அன்று மாலை மட்டக்களப்பு அரசடி மகாஜனக் கல்லூரியில் கூடினோம் அதில் கலாநிதி செ.யோகராசா, திரு.சீவரெட்ணம், பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு ஆகியோர் மேலதிகமாக இணைந்து கொண்டனர். அன்றைய சந்திப்பில் கண்ணகி இலக்கிய விழாவின் நோக்கங்கள் தொடர்பாக எழுப்பிய சில வினாக்கள் சர்ச்சைகளை எழுப்பியதால் தீர்க்கமான முடிவொன்றுக்கு வர முடியாமல் அன்றைய சந்திப்புக் கலைந்தது.
சில நாட்கள் மெளனத்தின் பின் நானும் (செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்) ஆறுமுகம், அன்பழகன் குரூஸ் ஆகியோர் வெல்லவூர்கோபால், சதாசிவம் ஆகியோரை இணைத்துக்கொண்டு 28.03.2011 அன்று கவிஞர் வெல்லவூர்க்கோபால் அவர்களின் வீட்டில் கூடி 2011 ஆம் ஆண்டு கண்ணகி இலக்கிய விழாவை நடத்தியே தீருவது என முடிவெடுத்தோம். அதன்படி மீண்டும் பல புதியவர்களை இணைத்துக்கொண்டு 06.04.2011 அன்று மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டப்த்தில் கூடி 23 பேர் அடங்கிய கண்ணகி இலக்கிய விழாக் குழுவை ஏற்படுத்தினோம். செயற்குழுக் கூட்டங்கள் தொடர்ந்து 15.04.2011, 21.04.2011, 28.04.2011, 08.05.2011, 15.05.2011, 22.05.2011, 29.05.2011, 06.06.2011, 10.06.2011 ஆகிய தினங்களில் தொடராக நடைபெற்றன. பேராசிரியர் மெளனகுரு அவர்களையும் அவ்வப்போது அணுகி ஆலோசனை பெற்றுக்கொண்டோம். அவரும் மறுக்காமல் எம்மோடு ஒத்துழைத்தார். அதன் பெறுபுறாக 2011 ஜீன் 18,19 ஆகிய தினங்களில் மட் - அரசடி மகாஜனக் கல்லூரி கலையரங்கில் முதலாவது கண்ணகி இலக்கிய விழாவை மட்டக்களப்பில் வரலாறு அண்மையில் கண்டிராத வகையில் நடத்தினோம். இவ்விழாவின் வெற்றிக்கு மட்டக்களப்பு கதிரவன் கலைக்கழகம் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.
இவ்விழாவின் அங்கமாக 19 ஜீன் 2011 காலை நடைபெற்ற ஆய்வரங்கில் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் தனது தொகுப்புரையின் போது எதிர்காலத்தில் இவ்விழா இலக்கிய விழாவாக மட்டுமின்றி கலை இலக்கிய விழாவாக நடைபெறவேண்டும் என ஆலோசனை வழங்கினார். அதனை ஏற்று 2012 தொடக்கம் கண்ணகி கலை இலக்கிய விழாவாக நடைபெறுகின்றது. தொடர்ந்தும் இவ்வாறே நடைபெறும்.
இவ்வருடத்தில் இருந்து இவ்விழாவை மேலும் விரிவு படுத்தி காத்திரமான முறையில் முன்னெடுக்கும் முகமாக " கண்ணகி கலை இலக்கியக் கூடல்" எனும் 35 பேரைக் கொண்ட அமைப்பினை உருவாக்கியுள்ளோம். இதில் ஆர்வமுள்ளவர்கள் எதிர்காலத்தில் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.