கண்ணகி கலை இலக்கிய விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வுகள்

26ஜீன் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் காலை அமர்வுவான ஆய்வரங்கு மு.ப.9.30மணி-பி.ப.1.30மணிவரை இளங்கோவடிகள் அரங்கில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் கண்ணகி வழக்குரை காதையின் வீரக் கதாபாத்திரங்கள் பற்றிதாக அமைந்திருந்தது. இதில் முதன்மை அதிதிகளாக பேராசிரியர் துரைமனோகரன், உடுவை எஸ்.தில்லைநடராசா, பேராசிரியர் செ.யோகராசா, வைத்திய கலாநிதி க.அருள்நிதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஆய்வு மதிப்பீட்டாளர்களாக பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ், முதுநிலை விரிவுரையாளர் க.இரகுபரன் ஆகியோர் கலந்துகொள்ள ஆய்வரங்க இணைப்பாளராக திரு. த.சோமசுந்தரம் அவர்கள்  செயற்பட்டிருந்தார்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ்வரங்கு செல்வி பகவதி ஆறுமுகம் ஆசிரியையின் நெறியாள்கையில் அளிக்கை செய்யப்பட்ட வரவேற்பு நடனத்துடனும் கண்ணகி கலை இலக்கியக் கூடலின் செயற்குழு உறுப்பினர் திரு.செ.தபராசா அவர்களின் வரவேற்புரையுடனும் தெடர்ந்து நடைபெற்றது.
ஆய்வரங்க இணைப்பாளர் திரு.த.சோமசுந்தரம் அவர்களின் அறிமுக உரையுடன் தலைமையுரையையும் ஆய்வரங்கையும் பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்பாக நடத்திச் சென்றார். இதில்  வெடியரசன் (ஆய்வுரை1) பற்றி கவிஞர் த.மேகராசா வும் வீரநாரணன் (ஆய்வுரை-2) பற்றி மொழித்துறை தலைவர்  திருமதி ரூபி வலன்ரீனாவும் மீகாமன் (ஆய்வுரை-3) பற்றி விரிவுரையாளர் கோ.குகன் உம் விளங்குதேவன் (ஆய்வுரை-4) பற்றி தொல்லியல் ஆய்வானர் செல்வி க.தங்கேஸ்வரியும் (அவர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலையை அடுத்து அவரின் ஆய்வு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.சோமசுந்தரம் அவர்களால் வாசிக்கப்பட்டது) ஆகியோரும் அளிக்கை செய்தனர். அதன்பின் ஐயந்தெளிதலுடன் ஆய்வரங்கு இனிதே நிறைவு பெற்றது. பின்னர் சிறப்பு அதிதிகள் சார்பில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றத் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி சி.சந்திரசேகரம் அவர்கள் உரையாற்றினார். அதனைத் தெடர்ந்து முதன்மை அதிதிகளாகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் துரைமனோகரன், உடுவை எஸ்.தில்லைநடராசா, பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் உரையாற்றினர். ஆய்வாளர்களுக்கான சான்றிதழ் வழங்கலுடனும் கூடலின் செயற்குழு உறுப்பினர் திரு.செ.துரையப்பா அவர்களின் நன்றியுரையுடனும் இரண்டாம் நாள் காலை அமர்வுகள் நிறைவுபெற்று தொடர்ந்து மதியபோசனம் இடம்பெற்றது.

ஜுன் 26 இரண்டாம் நாள் மாலை கலை அரங்கும் நிறைவு விழாவும்  பி.ப.3.30மணி - இரவு 10 மணிவரை மாதவி அரங்கில் நடைபெற்றது இதில் முதன்மை அதிதிகளாக கலாநிதி.த. ஜெயசிங்கம்,  மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் ஞாயிறு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் ஏ.எஸ் யோகராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
மாலை அமர்வு இரண்டு பகுதிகளாக இடம்பெற்றிருந்தன அதில் அமர்வு-1 சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இங்கு கண்ணகி அம்மன் காவடிப்பாடல்கள், காவியப்பாடல்கள் நடன நிகழ்வுகள் அதிதிகள் சிறப்பு சொற்பொழிவுகள் என்பன இடம்பெற்றன.

இரண்டாம் நாள் மாலை அமர்வு-2 இரவு8.30மணி-நள்ளிரவு12மணிவரை விழாக்குழு துணைத்தலைவா சு.முருகேசபிள்ளை தலைமையில் நடைபெற்றது. இங்கு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான அமரர்.க.ஆறுமுகம் ஞாபகார்த்த பரிசு வழங்கல் இடம்பெற்றது அமர்வுகள் நிறைவு பெற்ற பின் வட்டக்களரி கூத்து ஆரம்பமாகியது இரவு 10 மணி-தொடக்கம் நள்ளிரவைத் தாண்டியும் சிலம்புச்செல்வி (தென்மோடி) கூத்து கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது. இதனை கண்ணகிமுத்தமிழ் மன்றம் தயாரித்து வழங்குகியிருந்தது. 2016 இத்தேடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழா இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வு வெற்றிபெறப் பங்காற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கண்ணகி கலை இலக்கிய கூடல் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் உவகையடைகின்றது.