கண்ணகி கலை இலக்கியக் கூடலின் நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழா 2014 தொடர்பான ஆரம்பக் கூட்டம் 18.05.2014 இன்று காலை 10.00 மணிக்கு விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் திரு.வ.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது. கண்ணகி கலை இலக்கியக் கூடலின் தலைவர் திரு.த.கோபாலகிருஸ்னன் மற்றும் கூடலின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம், 3ம் திகதிகளில் தம்பிலுவில்லில் இவ்வருட கண்ணகி கலை இலக்கிய விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இது விடயம் தொடர்பான விரிவான கூட்டம் எதிர்வரும் 25.05.2014 காலை 10.00 மணிக்கு தம்பிலுவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில்  நடைபெறும்.
அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.