கண்ணகி கலை இலக்கிய விழா 2011 ல் ஆரம்பித்து இவ் வருடம் நாலாவது விழாவாக தம்பிலுவில்லில் நடைபெறவுள்ளது.
முதலாவது விழா மட்டக்களப்பிலும், இரண்டாவது விழா மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலும், மூன்றாவது விழா அக்கரைப்பற்றிலும் சிறப்பாக நடைபெற்றது.
கண்ணகி கலைகளையும், இலக்கியங்களையும், நினைவுகூர்ந்து அதன் சிறப்புக்களை மக்கள் அறியச்செய்யும் அதே நேரம் கண்ணகி பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு கண்ணகி கலாசாரம்ஒன்றை உருவாக்கும் நோக்கில் அடுத்த விழா யூலை மாதமளவில் மிகவும் சிறப்பாக நடைபெற ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
'கண்ணகி கலை இலக்கியக் கூடல்' இதற்கான முன்னாயத்தங்களை தற்போது செய்து வருகின்றது.