மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக் கூடல் இன் ஏற்பாட்டில் 3வது வருடமாக கண்ணகி கலை இலக்கிய விழா நடைபெறவுள்ளது. முதல் விழா மட்டக்களப்பு மகாஜனாக்கல்லூரியிலும் இரண்டாவது விழா புதுக்குடியிருப்பிலும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. இம்முறை அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பில் இம்மாதம் 15ம்16 ம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில் இரு நாட்களும் பல்வேறு ஊர்வலம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தேறவுள்ளன.அதற்கான விரிவான ஏற்பாடுகளை பிரபல சிற்றிதழ் விற்பன்னர் செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் மேற்கொண்டுவருகிறார்.
திருமா மணிநங்கை வந்தாள்! – எங்கள் தேசந் தழைத்திட வந்தாள்! வந்தாள்! என்ற மகுடத்தின்கீழ் அழைப்பிதழ் அனுப்பட்டுவருகிறது.விசேடமாக பேராளர்களும் அழைகக்ப்படுகின்றனர்.15, ஜூன் 2013 சனிக்கிழமை, முதலாம் நாள் மாலை அமர்வு ‘தொடக்க விழா’ ‘கண்ணகி கலை இலக்கியக் கூடல்’ விழாத்தொடரின் முதலாம் நாள் காலை அமர்வு ‘தொடக்க விழா’ ஆக ‘கூலவாணிகன் சாத்தனார்’ அரங்கில் சனிக்கிழமை காலை 08.30 – பி.ப 01.15. வரை பேராசிரியர் சி. மௌனகுரு. தலைமையில் நடைபெறவுள்ளது.
முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் கலந்துகொள்வார். சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் .டி.டபிள்யூ.யூ.வெலிகல்ல ஓய்வு நிலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ம.தேவராஜன் சிறப்பு அதிதிகளாக அருட்தந்தை யோசப் மேரி அடிகளார். (தேவகிராமம், அலிகம்பை)திரு. வே. ஜேகதீசன். (.பிரதேச செயலாளர். ஆலையடி வேம்பு)வைத்தியகலாநிதி க. வித்தியாசங்கர். திரு. பரதன் கந்தசாமி. (தலைவர், கல்முனை தமிழ்ச் சங்கம்) திரு.வே.சந்திரசேகரம். (தலைவர், இந்துமாமன்றம், அக்கரைப்பற்று)திருமதி. சுபா சக்கரவர்த்தி. வலயக் கல்விப் பணிப்பாளர். மட்டக்களப்பு.ஆகியோர் கல்நமு கொள்வார்கள’.
இணைப்பாளராக அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்த சிறுவர் அபிவிருத்தி நலையத் தலைவரும் கண்ணகி கலை இலக்கிய விழா 2013 விழாக்குழுத் தலைவருமான இறைபணிச்செம்மல் த.கைலாயபிள்ளை செயற்பட்டுவருகிறார். தொகுப்பாளர்களாக ந.மகேந்திரன். புள்ளிவிபரத் திணைக்கள உத்தியோகத்தர்.. வி.சுகிர்தகுமார். (சமுர்த்திஉத்தியோகத்தர்) பொறுப்பாக்கப்பட்டுள்ளனா.
நிகழ்வுகள்.
காலை 08.30 – 09.45வரை ‘விழா ஊர்வலம்’ இடம்பெறவுள்ளது.வாகனப் பேரணி பட்டிமேடு கண்ணகியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கோளாவில் கண்ணகி அம்மன் கோயில் வழியாக அக்கரைப்பற்று மருதையடி ஆலயத்தை அடையும். அங்கிருந்து கால்நடையாக பேருர்வலம் கலாசார மண்டபம் வரை செல்லும்.
விழாவில் தமிழ் மொழி வாழ்த்துப்பாவை செல்வி.பு.கஜேந்தினி (சங்கீத ஆசிரியை, ஸ்ரீ.இ.கி.தே.பாடசாலை. அ.பற்று)திருமதி.ந.ராஜ்குமார். (தகவல் தொழில்நுட்ப ஆசிரியை, ஸ்ரீ.இ.கி.தே.பாடசாலை. அ.பற்று) ஆகியேர் இசைக்க கண்ணகி இலக்கிய விழாக் கீதத்தை செல்வி கௌசல்யா இராமலிங்கம் இசைப்பார்.
வாழ்த்துரையை சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், ஜோதிடமணி, சிவசிறி, க.லோகநாதகுருக்கள். பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வர தேவஸ்தானம் வழங்க வரவேற்புரையை த.கைலாயப்பிள்ளை. (விழாக்குழுத் தலைவர்) நிகழ்த்துவார்.
கண்ணகி இலக்கிய விழாப்பட்டயம் வாசித்தல் திருமதி. சுந்தரமதி வேதநாயகம்.தொடக்கவுரை – செங்கதிரோன் த.கோபலகிருஸ்ணன். தலைமையுரை – பேராசிரியர் சி. மௌனகுரு.

‘கூடல்’ (பரல்-2) – விழாமலர் வெளியீடு இடம்பெற நன்றியுரையை த. செல்வாநந்தம் (அம்பாறை மாவட்ட இணைப்பாளர், கண்ணகி கலை இலக்கிய கூடல்) நிகழ்துவார்.விவரண ஓளிப்படக்காட்சியை எஸ். எதிர்மன்னசிங்கம் ஆரம்பித்து வைப்பார்.நூலங்காடி இடம்பெறும். ஈழத்து சிற்றிதழ்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் விடப்படும்.15, ஜூன் 2013 சனிக்கிழமை, முதலாம் நாள் மாலை அமர்வு. ‘இயல் அரங்கு’ஆலையடிவேம்பு பிரதேச சபை காலசார மண்டபத்தில் அன்றைய மாலை நிகழ்வு ‘இயல் அரங்கு’ ஆக சேரன் செங்குட்டுவன் அரங்கில் .வா.குணாளன். (ஆலையடிவேம்புக் கோட்டக்கல்விப் பணிப்பாளர்) தலைமையில் நடைபெறவுள்ளது.
முதன்மை அதிதிகளாக உயர்திரு.பொ.சுவர்ணராஜ். (மேல்நீதிமன்ற நீதிபதி). சுந்தரம் அருமைநாயகம். அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம். . க. திலகராஜா. பொறியியலாளர் (கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்)ஆகியோர் கலந்துகொள்வார்கள்.சிறப்பு அதிதிகளாக கலாநிதி.மூ.கோபாலரட்ணம். பிரதேச செயலாளர். திருக்கோவில். கலாநிதி றமீஸ் அப்துல்லா. தலைவர் மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம். ஆர். சுகிர்தராஜன். திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளார். திருமதி திலகவதி கணேசமூர்த்தி (ஓய்வுநிலைக் வலயக் கல்விப் பணிப்பாளார்) .த.பத்மராஜா பொறியியலாளர் கலந்து கொள்வார்கள்.
03.15 மணிக்கு கவியரங்கம் ‘ஒருமா பத்தினி வந்தாள் என்ற தலைப்பில் கவியரங்கம் கவிமணி லாபாலன் தலைமையில் நடைபெறவுள்ளது. கவிஞர்களான அக்கரைப்பாக்கியன். மேரா.தம்பிலுவில் ஜெகா.அக்கரை மாணிக்கம்.நிலா தமிழின்தாசன். ஆகியோர் கவிச்சமரில் ஈடுபடுவார்கள். சிறப்புரையை ‘சிலப்பதிகாரம் உணர்த்தும் வாழ்க்கைத் துணைநலம்’ என்ற தலைப்பிவ் பிரபல கதாப்பிரசங்கி செஞ்சொற் செல்வர். ஆறு திருமுருகன். தலைவர். தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸதானம்,யாழ்ப்பாணம்.) நிகழ்த்துவார்.
16 ஜூன் 2013 ஞாயிறுக்கிழமை. இரண்டாம் நாள் காலை அமர்வு. ஆய்வரங்கு இரண்டாம்நாள் காலை அமர்வு 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச சபை காலசார மண்டபத்தில் இளங்கோவடிகள் அரங்கில் ஆய்வரங்காக ‘ கண்ணகி – ஓர் பன்முகப் பார்வை ‘ என்ற தலைப்பில் செல்வி. க.தங்கேஸ்வரி. தலைமையில் நடைபெறவுள்ளது.
முதன்மை அதிதியாக உயர்திரு. த.கருணாகரன் ( சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ) பேராசிரியர். சி. சிவசேகரன்.ஆகியோர் கலந்துகொள்ள சிறப்பு அதிதிகளாக . வே.கனகரெத்தினம். (பிரதம கணக்காளர், கச்சேரி, அம்பாரை.. கி. குணநாயகம். . மா. கிருபைராஜா.. தி. கிருபைராஜா. ஆகியோர்கலந்துகொள்வார்கள்.ஆய்வரங்கு ஆய்வு மதிப்பீட்டாளர்களாக பேராசிரியர். வ.மகேஸ்வரன். தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். பேராசிரியர். செ.யோகராசா.முதுநிலை விரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம். ஆகியோர் செயற்படுவார்கள்.இணைப்பாளராக செ. தர்மபாலன்முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர். திருக்கோவில் கொறுப்பாக்கப்பட்டுள்ளார்.
ஆய்வுரையை – ‘சிலப்பதிகாரக் கண்ணகியின் இல்லறம்’.என்ற தலைப்பில் ஆய்வாளர். – திரு க.ரகுபரன் முதுநிலை விரிவுரையாளர். தெ.கி.ப.க ‘மாதவி மணிமேகலை ஆகியோரின் வாழ்வியல்’. என்ற தலைப்பில் ஆய்வாளர். – திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சஸ். முதுநிலை விரிவுரையாளர். கிழக்குப் பல்கலைக் கழகம். ‘தமிழகத்தில் கண்ணகி வழிபாடு’ என்ற தலைப்பில் ஆய்வாளர். – திரு.நா.நவநாயகமூர்த்தி. ஆய்வார்வலர், பனங்காடு, அக்கரைப்பற்று.– ‘கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் பிரதிபலிப்புக்கள்’என்ற தலைப்பில் ஆய்வாளர். கலாநிதி அனுசூயா சேனாதிராஜா. முதுநிலை விரிவுரையாளர். தெ.கி.ப.க ‘வட இலங்கையில் கண்ணகி வழிபாடு’ என்ற தலைப்பில் ஆய்வாளர். – திருமதி சாந்தி கேசவன். முதுநிலை விரிவுரையாளர். கிழக்குப் பல்கலைக் கழகம். ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகயைச் சமர்ப்ப்pத்து உரையாற்றுவார்கள்.
16 ஜூன் 2013 ஞாயிறுக்கிழமை.இரண்டாம் நாள் மாலை அமர்வு.பிரதான இறுதி நிகழ்வு ‘கலையரங்கும் நிறைவு விழாவும்’ ஆக மாதவி அரங்கில் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் பணிப்பாளர், கலாநிதி. க.பிறேமகுமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிமுதல்9 மணிவரை நடைபெறும்.
முதன்மை அதிதியாக : கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜ். உப வேந்தர். கிழக்குப் பல்கலைக்கழகம். மற்றும்
சிறப்பு அதிதிகளாக வைத்திய கலாநிதி . க.முருகானந்தம்.பணிப்பாளர். மட்ஃ போதனா வைத்தியசாi கலாநிதி.செ.குணபாலன். விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம்.சு. ஹரன். பிரதேச செயலாளர். நாவிதன்வெளி.. சி.ஜெகராஜன். பிரதேச செயலாளர். காரைதீவு. க. லவநாதன். பிரதேச செயலாளர். கல்முனை. ஆகியோர் கலந்துகொள்வர்.

இணைப்பாளராக ப. கிருஸ்;ணப்பிள்ளை அதிபர். கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம். இயங்குவார்.
இறுதிநாள் நிகிழ்வில வண்ணகி வசந்தன். அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்;ண தேசிய பாடசாலை மாணவர்கள். கண்ணகி காவடிப் பாடல்கள் – செல்வன் தே. லோகவியாசர் ( 4ம் ஆண்டு மாணவன், மட்ஃ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்.கிராமிய நடனம். – அக்கரைப்பற்று சுவாமி விபுலாநந்தா இல்ல மாணவர்கள்.சாஸ்திரிய நடனம். ஜதீஸ்வரம் நெறியாள்கை – திருமதி.சு.விஜயசாந்தன். கண்ணகி குளிர்த்திப்பாடல்கள். .மா.கிருபைராஜா. அதிபர். ஸ்ரீ இராமகிருஷண தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று. நாட்டிய நாடகம், நர்த்தனபவனம் நாட்டியப்பள்ளி மாணவர்கள். மண்ணின் பாடல்கள். – சண்முகம் சிவகாந்தன் (மக்கள் சண்முகம்.) தீர்மானங்கள். அன்பழகன் குரூஸ். செயலாளர். கண்ணகி கலை இலக்கியக் கூடல். கூத்து. ‘மனு நீதி கண்ட சோழன்’ நெறியாள்ளை திருமதி. ந.ராஜகுமார். (தகவல் தொழில்நுட்ப ஆசிரியை) என்பன இடம்பெற்று முதன்மை அதிதி உரையுடன் நிறைவுரை. திரு. மா.சதாசிவம். (துணைத் தலைவர், கண்ணகி கலை இலக்கிக் கூடல்) இம்பெறும்.

இலக்கிய ஆர்வலர்களுக்கு பெருவிருந்தாக அமையப்போகும் கண்ணகி இலக்கியவிழாவைப் பருக வாரீர்.