பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் தனது கணவன் கோவலன் கொலையுண்டதில் ஆத்திரமுற்று மதுரையை எரித்த கண்ணகி வழிபாட்டை எடுத்தியம்பும் இலக்கிய விழா இன்று மட்டக்களப்பில் ஆரம்பமாகி கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
சிலப்பதிகாரத்தின் நாயகியாக திகழும் பத்தினித்தாய் கண்ணகி வழிபாட்டுக்கு மட்டக்களப்பு மக்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்ற நிலையில் கண்ணகிக்கான சடங்கு உற்சவம் கடந்தவாரம் இடம்பெற்று முடிந்த நிலையில் இன்று மட்டக்களப்பில் கண்ணகி இலக்கிய விழா எடுக்கப்படுகின்றது.
இன்று மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி கலையரங்கில் ஆரம்பமான இவ் விழாவில் கண்ணகி வழிபாடுடன் தொடர்புடைய பல ஆய்வரங்குகளும் கவியரங்குகளும் இடம்பெறுகின்றன.
கண்ணகி வழிபாட்டினையும் தொன்மையினையும் பாரம்பரிய கலைகலாசார விழுமியங்களையும் அழிந்துபோகாது பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் இந்த விழா சிறப்பாக வருடாவருடம் எடுப்பதற்கும் முகமாக இவ்வாண்டுக்கான விழா இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான கண்ணகி இலக்கிய விழா பட்டயமும் இன்று பிரகடனம் செய்யப்பட்டது. இந்த பட்டயத்தினை சுவாமி விபுலானந்தரின் மருமகளான ஓய்வுபெற்ற அதிபர் திருமதி கோமேதவல்லி செல்லத்துரை அவர்களால் வாசித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்து பிரகடனப்படுத்தி வைத்தார்.
திருமா மணிநங்கை வந்தாள்- எங்கள் தேசந் தழைத்திட வந்தாள்!வந்தாள்! என்று ஒலிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து கண்ணகி இலக்கிய விழா ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளுடன் பண்டைய கண்ணகி வழிபாட்டுக்கு உரித்தான பறை மேளம் ஒலிக்க மட்டக்களப்பு நகர் ஊடாக இடம்பெற்ற ஊர்வலம் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தது.
இவ்விழா கூலவாணிகன் கூத்தனார் அரங்கில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து சிறப்பித்ததுடன் கண்ணகி இலக்கிய விழா சிறப்பிதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலக அங்காடியினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொ.செல்வநாயகம் திறந்துவைத்தார்.
இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த விழாவின் இரண்டாவது உரையரங்கு இன்று மாலை சேரன் செங்குட்டுவன் அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
நாளை காலை ஆய்வரங்கு இளங்கோ அடிகள் அரங்கிலும் நிறைவு விழா நாளை மாலை மாதவி அரங்கிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.