கண்ணகி கலைஇலக்கியக் கூடலின் நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழா ஆகஸ்ட்மாதம் 1ம் திகதி இன்று திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்னலில் இருந்து தொடங்கிய பேரணியுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.பேரணியில்பலவிதமான பவனியும், ஊர்திகளும், இன்னியவாத்தியங்களும்,பல்வகைப்பட்ட பிரமுகர்கள்  மற்றும் பேராளர்களுடன் ஊர்வலத்தில் பங்குபற்றினர். ஊர்வலம்  நிறைவடைந்ததும் தொடக்கவிழாவும். கொம்புமுறி விளையாட்டின் போர்த்தேங்காய் உடைத்தலும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.