கண்ணகி கலை இலக்கியக் கூடல் வருடா வருடம் நடத்தும் கண்ணகி கலை இலக்கிய விழாவின் பத்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சிறப்பாக இடம் பெற உள்ளது.
விழாவில் ஓர் அங்கமான மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலை மாணவர்கள், மற்றும் மண்முனை தென் மேற்குப் பிரதேச கலைக் கழகங்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளன.
பின்வரும் போட்டி விதிகளுக்கு அமைவாக தாங்கள் சுயமாக தயாரிக்கப்பெற்ற விண்ணப்பப் படிவங்களை பாடசாலை அதிபர் அல்லது கலைக் கழகத் தலைவர் கையொப்பத்துடன் எதிர்வரும் 10.09.2025 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
போட்டிகளில் பாடசாலை மாணவர்களுக்கான போட்டி எதிர்வரும் 20.09.2025 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம், கலைக் கழகங்களுக்கான போட்டி எதிர்வரும் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மட்/மட்/மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் எனவே இப் போட்டியில் பங்கு பற்றி விழா சிறப்படைய உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி விதிகள்.
வசந்தன் கூத்து.
- நேரம் 12 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்
- தரம் 8,9,10 மாணவர்கள் பங்குகொள்ள முடியும்
- இசைவழங்குனர், பின்னணி உட்பட 10 - 15 நபர்கள் பங்குபற்ற முடியும்.
- முற்றுமுழுதாக பாரம்பரியங்களைத் தழுவியதாகவே அமைய வேண்டும்.
- ஒலிப்பதிவு செய்து ஆற்றுகை செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
- நேரம் 12 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்
- தரம் 06, 07 மாணவர்கள் பங்குகொள்ள முடியும்
- இசைவழங்குனர், பின்னணி உட்பட 10 - 15 நபர்கள் பங்குபற்ற முடியும்.
- முற்று முழுதாக பாரம்பரியங்களைத் தழுவியதாகவே அமைய வேண்டும்.
- ஒலிப்பதிவு செய்து ஆற்றுகை செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
- நேரம் 12 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்
- தரம் 8,9,10 மாணவர்கள் பங்குகொள்ள முடியும்
- இசை வழங்குனர், பின்னணி உட்பட 15 நபர்கள் பங்குபற்ற முடியும்,
- முற்றுமுழுதாக பாரம்பரியங்களைத் தழுவியதாகவே அமைய வேண்டும்.
- கண்ணகி அம்மனை மையப்படுத்தியதாகவும், பாரம்பரியம், மரபுசார் மெட்டில் காவடிப்பாடல்கள் இசைக்கப்பட வேண்டும்.
- ஒலிப்பதிவு செய்து ஆற்றுகை செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
- நேரம் 05 – 07 நிமிடங்கள்
- தரம் 03, 04 மாணவர்கள் பங்குகொள்ள வேண்டும்.
- கண்ணகி வரலாற்றினை கூறுவதாக அமைய வேண்டும்.
- சப்பலாக்கட்டை மற்றும் இலத்திரனியல் சுருதி பயன்படுத்த முடியும்.
- கலாசார ஆடையுடன் பங்குபெற்ற வேண்டும்.
- நேரம் 10 - 15 நிமிடங்கள்
- 7 நபர்கள் பங்குபற்ற வேண்டும்.
- 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' எனும் கருப்பொருள் கதையாக அமைய வேண்டும்
- தரம் 10, 11, 12, 13 மாணவர்கள் பங்குகொள்வதுடன், பிரதான பாடகர் (குரு) கதையை சொல்லி வில்லில் அடித்துப் பாடுதல் வேண்டும்.
- பக்கப் பாட்டும் பக்க உரையும் நகைச்சுவை நயங்களும் இருவரால் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனைய நால்வருள் ஒருவர் விற்கடம், தோற்கருவி, மற்றவர் சுருதி, உடுக்கு பயன்படுத்த முடியும்.
- சினிமாப்பாடல் மெட்டுகள் இடம் பெறக் கூடாது.
- இசை வழங்குனர், பின்னணி உட்பட 7 நபர்கள் பங்குபற்ற முடியும்
- முற்றுமுழுதாக பாரம்பரியங்களைத் தழுவியதாகவே அமைய வேண்டும்.
- நேரம் 12 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.
- ஒரு கலைமன்றத்தில் இருந்து ஓரு குழுமாத்திரம் பங்குபற்ற முடியும்.
- இசைவழங்குனர், பின்னணி உட்பட10 - 15 நபர்கள் பங்குபற்ற முடியும்
- கொம்புமுறி நிகழ்வினை மையப்படுத்தியதாக அமைதல் வேண்டும்.
- ஒலிப்பதிவு செய்து ஆற்றுகை செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
- நேரம் 12 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.
- 18 வயதிற்கு மேற்பட்டோர் தனியாகவோ குழுவாகப் பங்குபற்ற முடியும்
- ஒரு கலைமன்றத்தில் இருந்து ஒரு குழுமாத்திரம் பங்குபற்றமுடியும்.
- கண்ணகி அம்மனுடைய காவியங்களை மையப்படுத்தியதாக உடுக்கிசை அமைதல் வேண்டும்.
- கலாசார உடைகளுடன் பங்குபற்றுதல் கட்டாயமானதாகும்.
- 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர் பாடுதல் வேண்டும்.
- நேரம் 10 நிமிடங்களுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும்.
- கலாசார உடைகளுடன் பங்குபற்றுதல் கட்டாயமானதாகும்.
பாடசாலை மட்டப் போட்டி இணைப்பாளர்,