வி.ரி.சகாதேவராஜா
மட்டக்களப்பு, கண்ணகி கலை இலக்கியக் கூடலின் ஏற்பாட்டில், 3ஆவது வருட கண்ணகி கலை இலக்கிய விழா நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை கலசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப வைபவமாக, பட்டிமேடு புராதன கண்ணகி ஆலயத்திலிருந்து ஊர்தி ஊர்வல பவனி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கண்ணகி கலை இழக்கிய விழா இரு அமர்வுகளாக நடைபெற்றன.
'கூலவாணிகன் சாத்தனார்' என்ற பெயரில் பேராசிரியர் மௌனகுரு தலைமையில் இடம்பெற்ற முதல் அமர்வில் வருடாந்த மலர் வெளியீடும் நூல் அங்காடியும் விவரண ஒளிப்படக் காட்சியும் இடம்பெற்றன.
'சேரன் செங்கூற்றுவன்' என்ற பெயரில் ஆலையடிவேம்புக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் வா.குணாளன் தலைமையில் இரண்டாவது அமர்வு நடைபெற்றது.
மேற்படி இரு அமர்வுகளிலும் அரச உயர் அதிகாரிகள், கலை ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: ரட்ணம் பொன்)

http://www.tamilmirror.lk/--main/71045--2013.html