கண்ணகி கலை இலக்கியக் கூடல் நிகழ்வு எதிர்வரும் யூன் மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15ஆம் திகதி மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ள இயலரங்கில் சிறப்பம்சமாக “சிலப்பதிகாரம் உணர்த்தும் வாழ்க்கைத் துணைநலம்” எனும் தலைப்பில் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனின் ஒரு மணி நேர சொற்பொழிவு இடம்பெறவுள்ளதாக கண்ணகி கலை இலக்கியக் கூடலின் செயலாளர் அன்பழகன் குரூஸ் தெரிவித்தார்.
இயற்தமிழின் சுவை நுகர அனைவரையும் அரங்கிற்கு வருகை தருமாறு கண்ணனி கலை இலக்கியக் கூடல் இலக்கிய ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

http://www.tamilula.com/news/59/article/kannaki-litreger-meeting-4278